அனைவருக்கும் கல்வி இயக்க ஆங்கில ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு ஆங்கில திறன் வளர்த்தல் பயிற்சி அளிக்கப்பட்டது. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் 630 தொடக்க நிலை ஆசிரியர்களுக்கும், 6 முதல் 8 வரை பாடம் கற்பிக்கும் 410 உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கும் ’ஆங்கில திறன் வளர்த்தல்’ பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த பயிற்சியை அனைவருக்கும் கல்வி இயக்கம், பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் யுனிசெப் நிறுவனம் இணைந்து நடத்துகின்றன.டிச., மாதம் அனைத்து வட்டார வள மையங்களிலும் பயிற்சி நடக்கிறது.
பயிற்சியில் கருத்தாளர்களாக செயல்படும் 30 ஆங்கில ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பரமக்குடி வட்டார வள மையத்தில் மாவட்ட அளவிலான பயிற்சி அளிக்கப்பட்டது.
அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு துவக்கி வைத் தார். உதவி திட்ட அலுவலர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார்.
பிரிட்டிஷ் கவுன்சிலில் பயிற்சி பெற்ற ராமநாதபுரம் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் சுமதி, திருப்புல்லாணி அன்வர்சஹான், மண்டபம் ஜெகநாதன், நயினார்கோவில் சண்முகநாதன், முதுகுளத்துார் பாக்கிய மரியானா நான்சி, பரமக்குடி புஷ்பலதா ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர்.ஏற்பாடுகளை மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர், தரநிலை ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.