Pages

Friday, November 11, 2016

கணினி தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு

தமிழக அரசின், கணினி தமிழ் விருது பெற, டிச., 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.தமிழ் மொழி வளர்ச்சியை, கம்ப்யூட்டரின் அனைத்து நிலைகளிலும் பயன்படுத்தும் வகையில், சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்குவோருக்கு, 2013 முதல், 'முதல்வர் கணினி தமிழ் விருது' வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது, ஒரு லட்சம் ரூபாய், ஒரு சவரன் தங்கப்பதக்கம் உடையது. 2013 முதல் 2015க்குள், மென்பொருள் தயாரித்தோர், இந்தாண்டு விருதுக்கு விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பங்களை, தமிழ் வளர்ச்சி துறையின் இணையதளத்தில், இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, 'தமிழ் வளர்ச்சி இயக்குனர், தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ் சாலை, எழும்பூர், சென்னை - 8' என்ற முகவரிக்கு, டிச., 31க்குள் அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 044 - 2819 0412, 2819 0413 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.