Pages

Friday, November 11, 2016

அகவிலைப்படி உயர்வு: ஓரிரு நாள்களில் அறிவிப்பு

அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு ஓரிரு நாள்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்ட நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு கொடுக்கப்படும் எனத் தெரிகிறது. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகவுள்ளது. மத்திய அரசு ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்திய பிறகு அகவிலைப்படியை குறைந்த சதவீத அளவுக்கு அறிவித்தது.


தமிழகத்தில் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்படாத காரணத்தால் அகவிலைப்படி உயர்வு அதிகளவில் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், ரூ.1,000 முதல் ரூ.6 ஆயிரம் வரை அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு கூடுதலாகக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.