2017-ஆம் ஆண்டுக்கான ஜே.இ.இ. (ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு) முதன்மைத் தேர்வை சென்னை ஐஐடி நடத்த உள்ளது. 2017-ஆம் ஆண்டுக்கான ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வு ஏப்ரல் 2, 8, 9-ஆம் தேதிகளில் நடைபெற உள்ள நிலையில், முதன்மைத் தேர்வு 2017-ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி நடைபெற உள்ளது.
என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி., ஐ.ஐ.டி. ஆகிய மத்திய அரசு நிதியுதவியின் கீழ் இயங்கி வரும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனப் படிப்புகளில் சேர்வதற்கு அகில இந்திய அளவில் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) சார்பில் நடத்தப்படுகிறது.
இந்தத் தேர்வு இரண்டு நிலைகளாக நடத்தப்படுகிறது. முதலில் ஜே.இ.இ. முதல் நிலைத் தேர்வும், பின்னர் ஏதாவது ஒரு ஐஐடி சார்பில் ஜே.இ.இ. முதன்மைத் தேர்வும் நடத்தப்படும்.
ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் படிப்புகளில் சேர முடியும்.
ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வில் தகுதி பெற்று, அடுத்ததாக நடத்தப்படும் ஜே.இ.இ. முதன்மைத் தேர்விலும் தகுதி பெறுபவர்கள் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி. கல்வி நிறுவனங்களில் சேர முடியும்.
முதல்நிலைத் தேர்வு: சி.பி.எஸ்.இ. சார்பில் நடத்தப்படும் 2017-ஆம் ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வு 2017 ஏப்ரல் 2, 8, 9-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கு டிசம்பர் 1-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க 2017-ஆம் ஆண்டு ஜனவரி 2 கடைசித் தேதியாகும். தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த ஜனவரி 3 கடைசி நாள்.
முதன்மைத் தேர்வு: 2017-ஆம் ஆண்டுக்கான ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு (அட்வான்ஸ்டு) சென்னை ஐஐடி சார்பில் நடத்தப்பட உள்ளது. இந்த முதன்மைத் தேர்வானது 2017-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.
இதற்கு 2017 ஏப்ரல் 28 முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க மே 2 கடைசித் தேதியாகும்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.