வங்கிகள் மூலம் ஓய்வூதியம் பெறுவோர் தங்களது வாழ்வுச் சான்றிதழை வரும் ஜனவரி 15 வரை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அனைத்து வங்கிகளுக்கும் மத்திய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் நேரில் சென்று கையெழுத்திட்டு வாழ்வுச் சான்றிதழ்களை ஒவ்வொரு ஆண்டும் நவம்பரில் செலுத்த வேண்டும்.
ஆனால், வங்கிக் கிளைகளில் 500, ஆயிரம் ரூபாய் செல்லாதது என்ற அறிவிப்பால் எழுந்துள்ள சூழலால் வாழ்வுச் சான்றிதழ்களை வரும் ஜனவரி 15 ஆம் தேதி வரை அளிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.