Pages

Thursday, November 17, 2016

சம்பளத்தை ரொக்கமாக கொடுங்க! : கோவா அரசு ஊழியர்கள் கோரிக்கை

கோவா மாநில அரசு ஊழியர்கள், நடப்பு மாதத்துக்கான சம்பளத்தை, ரொக்கமாக தரும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கில், பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதென, பிரதமர் மோடி அறிவித்தார். பழைய நோட்டுகளை மாற்ற, டிச., 30 வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. இருப்பினும், பழைய நோட்டுகளை மாற்றவும்,

ஏ.டி.எம்.,களில் பணம் பெறவும், வங்கிகள் முன், நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி இருப்பதால், மக்கள் மத்தியில் அதிருப்தி காணப்படுகிறது. இந்நிலையில், பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர் லஷ்மிகாந்த் பர்சேகர் தலைமையிலான ஆட்சி நடக்கும் கோவாவில், அரசு ஊழியர்கள், நடப்பு மாதத்துக்கான சம்பளத்தை, வங்கியில், 'டிபாசிட்' செய்வதற்கு பதில், ரொக்கமாக தரும்படி கோரியுள்ளனர். இது தொடர்பாக, முதல்வர் லஷ்மிகாந்த் பர்சேகருக்கு, கோவா அரசு ஊழியர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. அதே சமயம், பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாததாக வெளியான அறிவிப்புக்கு, அரசு ஊழியர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.