Pages

Tuesday, November 1, 2016

செயல்படாத பி.எப். கணக்கில் உள்ள பணத்துக்கு 8.8 சதவீத வட்டி மத்திய அரசு அறிவிப்பு

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எப்.) கணக்கில், தொடர்ந்து 36 மாதங்களாக பணம் செலுத்தப்படாமல் இருந்தால், அந்த கணக்கு செயல்படாத கணக்கு ஆகி விடும். இப்படி செயல்படாமல் போன கணக்குகளில் ரூ.42 ஆயிரம் கோடிக்கு மேல் பணம் உள்ளது.  2011–2012–ம் நிதி ஆண்டில் இருந்து அத்தகைய கணக்குகளுக்கு வட்டி அளிப்பதை மத்திய அரசு நிறுத்திவிட்டது.
இந்நிலையில், செயல்படாத பி.எப். கணக்குகளுக்கு 8.8. சதவீத வட்டி அளிக்க மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாக மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார்.இதுகுறித்து ஐதராபாத்தில் அவர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:–  தொழிலாளர் நலன் காக்கும் அரசு என்று கூறிக்கொண்ட முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, செயல்படாத பி.எப். கணக்கில் உள்ள பணத்துக்கு வட்டி அளிப்பதை நிறுத்தியது. ஆனால், நாங்கள் அந்த பணத்துக்கு வட்டி அளிக்க முடிவு செய்துள்ளோம். பிரதமர் மற்றும் மத்திய நிதி மந்திரியுடன் ஆலோசனை நடத்திய பிறகு தொழிலாளர் நல அமைச்சகம் இம்முடிவை எடுத்துள்ளது. இதுபற்றிய அறிவிப்பாணை விரைவில் வெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.