Pages

Friday, November 18, 2016

8ம் வகுப்பு தனி தேர்வு விண்ணப்பம்

'எட்டாம் வகுப்பு தனித்தேர்வுக்கு, இன்று முதல், 25 வரை, 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பிக்கலாம்' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது. அரசு தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: அடுத்த ஆண்டு ஜனவரியில் நடக்கவுள்ள, 8ம் வகுப்பு தனித்தேர்வுக்கு, 12 ஆண்டு, ஆறு மாதங்களை பூர்த்தி அடைந்தவர்கள், இன்று முதல், 25 வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
அரசு தேர்வுத் துறையின் சேவை மையங்கள் மூலம், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களை, தேர்வுத் துறை இணையதளத்தில் அறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.