Pages

Friday, November 18, 2016

10 அரசு இன்ஜி., கல்லூரிகளில் 7 முதல்வர் பணியிடங்கள் காலி

தமிழகத்தில், 10 அரசு பொறியியல் கல்லுாரிகளில், ஏழு முதல்வர் பணியிடங்கள், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக கிடக்கின்றன. தமிழகத்தில், 10 அரசு பொறியியல் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், முதல்வர், பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி, 10 அரசு பொறியியல் கல்லுாரிகளில், ஏழு முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மூத்த பேராசிரியர்கள், கூடுதல் பொறுப்பாக, முதல்வர் பணியை கவனித்து வருகின்றனர். கல்லுாரிகளின் அனைத்து செயல்பாடுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய முதல்வர் பணியிடங்களை நிரப்புவதில், இரண்டு ஆண்டுகளாக, உயர்கல்வி துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
பொறியியல் கல்லுாரி பேராசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: பல பேராசிரியர்கள், 30 ஆண்டுகள் பணிபுரிந்தும் கூட, பதவி உயர்வின்றி உள்ளனர். எனினும், காலியிடங்கள் நிரப்பப்படவில்லை. பேராசிரியர் பணியிடங்கள் அதிக அளவில் காலியாக உள்ள நிலையில், 192 இடங்களுக்கு மட்டுமே, போட்டி தேர்வு நடத்தி முடித்துள்ளனர். திருச்சி, தஞ்சாவூர், போடி, தர்மபுரி பகுதிகளில், புதிதாக துவங்கப்பட்ட கல்லுாரிகளில், இயற்பியல், வேதியியல், கணித பாடப் பிரிவுகளுக்கு பேராசிரியர் பணியிடங்கள், இதுவரை உருவாக்கப்படவில்லை. பிரச்னைகளுக்கு தீர்வு காண, உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் 

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.