Pages

Tuesday, October 18, 2016

மாணவர்களுடன் சத்துணவு சாப்பிட்ட “ஆட்சியர்”- தினம் ஒரு அதிரடியால் 'பொதுமக்கள் நெகிழ்ச்சி'.

திருவண்ணாமாலை மாவட்ட ஆட்சியர் பள்ளி மாணவர்களுக்காக சமைக்கப்பட்டிருந்த சத்துணவை சாப்பிட்டு பார்த்து ஆய்வு மேற்கொண்டார்.கடந்த 11ம் தேதி திருவண்ணாமலை அடுத்த சமுத்திரம், தண்டராம்பட்டு மெயின் ரோட்டில் இரு சக்கர வாகனத்தில்சென்ற ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டு நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதனை கண்ட திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் காரிலிருந்து இறங்கி கீழே விழுந்த அந்த வாலிபரை தனதுகாரிலேயே அழைத்து சென்று சிகிச்சைக்காக மருத்துவமனையில்  அனுமதித்ததார்.நேற்று மதிய உணவு வேளையின் போது,   பூங்கா பகுதி ஒன்றின் புல் தரையின் மீது சக ஊழியர்களுடன் அமர்ந்துசகஜமாக ஆட்சியர் பிரசாந்த் மதிய உணவு சாப்பிட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி அனைவரின் மனதையும் கவர்ந்தது.  இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் அரடாப்பட்டு கிராமத்திலுள்ள அரசு பள்ளியில் சத்துணவு தரமாக சமைத்து கொடுப்பது இல்லை என புகார் எழுந்தது.

இதையடுத்து அந்த பள்ளியில் பிரசாந்த் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, மாணவர்களுக்ககாக சமைக்கப்பட்டிருந்த சத்துணவை சாப்பிட்டு பார்த்து உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார். இதனை பள்ளி மாணவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.பிரசாந்த் தான் ஆட்சியர் என பெரிதாக நினைக்காமால் நாளுக்கு நாள் அவர் மிக எளிமையாக நடந்து கொள்ளும் இது போன்ற விஷயங்கள் அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.