தமிழகத்தில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை, அக்., 17, 19ல், நடத்த, மாநில தேர்தல் கமிஷன் முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பு, செப்., 25ல் வெளியானது. வேட்பு மனு தாக்கல் மறுநாள் துவங்கி, அக்., 3ல் முடிந்தது. தேர்தலில் போட்டியிட, 4.97 லட்சம் பேர் மனு தாக்கல் செய்தனர். இவர்களிடம் இருந்து, 10 கோடி ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால், இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்றவில்லை எனக் கூறி, சென்னை உயர் நீதிமன்றம், தேர்தலை ரத்து செய்தது. அதனால், ஏற்கனவே மனு தாக்கல் செய்தவர்கள், டிபாசிட் பணம் திரும்ப கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதுகுறித்து, மாநில தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'உள்ளாட்சி தேர்தல் வழக்கை, சுமுகமாக முடிக்க கவனம் செலுத்தி வருகிறோம். மனு தாக்கல் செய்தவர்களுக்கான டிபாசிட் பணம் திரும்ப தருவது குறித்து, சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்' என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.