Pages

Tuesday, October 25, 2016

அகவிலைப்படிக்காக நாளை ஆர்ப்பாட்டம் : அரசு ஊழியர்கள் முடிவு

அகவிலைப்படி, சம்பளக்குழு அமைக்க கோரி தமிழகத்தில் ௧,௦௦௦ அலுவலகங்கள் முன் நாளை (அக்., 26) ஆர்ப்பாட்டம் நடத்த அரசு ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். மாநில செயலாளர் செல்வம் மதுரையில் கூறியதாவது: 'புதிய சம்பளக் குழுவை மத்திய அரசு அமைத்ததும், மாநில அரசும் அமைக்கும்' என முதல்வர் ஜெ., வாக்குறுதி அளித்தார்.


மத்திய அரசு ஏழாவது சம்பளக்குழுவை அமைத்து விட்டது; வாக்குறுதி அளித்தபடி, தமிழகத்தில் எட்டாவது சம்பளக்குழுவை அமைக்க வேண்டும். இடைக்கால நிவாரணம் ௨௦௧௬ ஜன., ௧ முதல் வழங்க வேண்டும். ஜனவரி, ஜூனில் அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும். ஜூன் முதல் அகவிலைப்படி வழங்கப்படவில்லை. எனவே, மாநில செயற்குழு முடிவின்படி ௧,௦௦௦ அலுவலகங்கள் முன் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.