Pages

Thursday, October 27, 2016

அண்ணாமலைப் பல்கலை.யில் சான்றிதழ் வழங்க சிறப்பு முகாம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் பெறாத மாணவர்களுக்கு அதை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககம் மூலம் கடந்த 15 ஆண்டுகளாகப் படித்து தேர்ச்சி பெற்றவர்களில் சிலர் தங்களது மதிப்பெண் பட்டியல் (Mark Sheet), பட்டச் சான்றிதழை(Covocation)  இதுவரை பெறாததால் அவை தேர்வுத் துறையில் உள்ளன.


அந்த மாணவர்கள் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்வதற்கான சிறப்பு முகாம் டிசம்பர் 9 முதல் 11-ஆம் தேதி வரை பல்கலைக்கழகத் தேர்வுத் துறை கட்டடத்தில் நடைபெற உள்ளது. எனவே, இதுவரை சான்றிதழ் பெற்றுக் கொள்ளாதவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பயன்பெறலாம். மாணவ, மாணவிகள் தங்களது அடையாள அட்டையுடன் நேரில் வந்து, பல்கலைக்கழகத்துக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையைச் செலுத்தி சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04144-238027, 237368, 238358, 04144-238282, 238248 EX: 578 என்ற எண்களிலும், aucertisplcamp16@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொண்டு தகவல் பெறலாம் என தேர்வுக் கட்டுப்பாடு அதிகாரி ராம.சந்திரசேகரன் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.