Pages

Friday, October 28, 2016

திண்டுக்கல் பள்ளிகளில் ’வழக்கறிஞர் கமிஷனர்கள்’ ஆய்வு

'தினமலர்’ நாளிதழ் செய்தி எதிரொலியாக, அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதி ஏற்படுத்த தாக்கலான வழக்கில் மதுரை, திண்டுக்கல், தஞ்சாவூர் மாவட்ட அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பதை ’வழக்கறிஞர் கமிஷனர்கள்’, ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல்லில் வழக்கறிஞர் லஜபதிராய், தஞ்சாவூரில் வழக்கறிஞர் என். ஆனந்தகுமார் தலைமையிலான ’வழக்கறிஞர் கமிஷனர்கள்’ நகரில் உள்ள பள்ளிகளை தவிர்த்து, தொலைத்துார கிராமங்களில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஆய்வு செய்து நவ.2., ல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. நேற்று ஆய்வு:நேற்று திண்டுக்கல்லில் வழக்கறிஞர் லஜபதிராய் தலைமையிலான குழு மாநகராட்சி பள்ளிகள், கிராமங்களில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஆய்வு செய் தது. ஆய்வின்போது நகர் நல அலுவலர் அனிதா, சுகாதாரம், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.