பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் தயாரிக்கப்படும், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான, வினா வங்கி புத்தக விற்பனை, ராஜவீதி, துணி வணிகர் மேல்நிலைப் பள்ளியில், நாளை முதல் துவங்கப்படும்.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனுக்காக, கல்வித்துறை அனுமதியோடு, பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், வினா வங்கி தயாரித்து, மாவட்டந்தோறும் விற்பனை செய்யப்படும். இப்புத்தகத்தை, அனைத்து பள்ளி மாணவர்களும் வாங்கி, பயிற்சி பெறலாம்.
காலாண்டு தேர்வு முடிந்த நிலையில், நடப்பு கல்வியாண்டுக்கான, வினா வங்கி புத்தக விற்பனை, நாளை (13ம் தேதி) முதல் துவங்குகிறது. இதற்கான &'நோடல்&' மையமாக, ராஜவீதி, துணி வணிகர் மேல்நிலைப்பள்ளி செயல் படுகிறது. ஞாயிறு அல்லாத மற்ற வேலை நாட்களில், காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, விற்பனை நடக்கும்.
பத்தாம் வகுப்பை பொறுத்தவரை, தமிழ், ஆங்கிலப்பாடத்திற்கு, வினா வங்கி புத்தகம், கணிதத் தீர்வு புத்தகம், அறிவியல் தீர்வு புத்தகம் ஆகியவை, இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. தமிழ், ஆங்கில வழியில் உள்ள, வினா வங்கி தொகுதி, 190 ரூபாயாகும்.
பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஆங்கில வழி புத்தகம், பயாலஜி மற்றும் கலைப்பிரிவு பாடங்களுக்கான புத்தகங்கள் இல்லை. தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், கணித தீர்வு புத்தகம் மற்றும் இரு தொகுதி வினா வங்கி புத்தகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இதன் விலை, 600 ரூபாயாகும்.
வினா வங்கி புத்தக இருப்பு குறித்து அறிய, 0422-- 2397018 / 94423 69382 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். விற்பனைக்கு வராத புத்தகங்கள் விரைவில் கொள்முதல் செய்து, மாணவர்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்படும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.