'அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய, ஏழாவது ஊதிய குழு அமைக்க வேண்டும்' என, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சங்க தலைவர், சாமி சத்தியமூர்த்தி, முதல்வர் தனிப்பிரிவுக்கு அளித்துள்ள மனு:
தற்போதுள்ள ஊதிய முரண்பாடுகளை களைந்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அதற்காக, ஏழாவது ஊதியக் குழு அமைக்க வேண்டும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும், பழைய பொது ஓய்வூதிய திட்டம் கொண்டு வர வேண்டும். மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை ஆராய கல்வியாளர் மற்றும் ஆசிரியர்களை கொண்ட கமிட்டி அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.