தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், 'குரூப் - 4' தேர்வுக்கு, இன்னும், 20 நாட்களே உள்ள நிலையில், 10ம் வகுப்பு புத்தகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு துறைகளில், இள நிலை உதவியாளர், வரி வசூலிப்பாளர், வரைவாளர், நில அளவையர் உட்பட, ஏழு வகை பதவிகளில், 5,451 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான, 'குரூப் - 4' எழுத்துத் தேர்வை, நவம்பர், 6ல், டி.என்.பி.எஸ்.சி., நடத்துகிறது.
தேர்வுக்கு, 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர். தேர்வில் வெற்றி பெற, குறைந்த பட்சம், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எனவே, தமிழக அரசின் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் உள்ள, 10ம் வகுப்பு புத்தகத்தை படித்து, விண்ணப்ப தாரர்கள் தேர்ச்சி பெறலாம். தேர்வுக்கு இன்னும், 20 நாட்களே உள்ள நிலையில், விண்ணப்பதாரர்களுக்கு, 10ம் வகுப்பு புத்தகங்களின் தேவை அதிகரித்துள்ளது. தமிழ்நாடு அரசு பாட நுால் கழக விற்பனை மையங்களில், தினமும் பல நுாறு பேர், 10ம் வகுப்பு புத்தகங்களை வாங்குவதால், பாட நுால் கழகத்திலும், புத்தகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.