Pages

Saturday, October 15, 2016

டிப்ளமோ நர்சிங் 18ல் கலந்தாய்வு

இரண்டு ஆண்டு, 'டிப்ளமோ நர்சிங்' படிப்புக்கான கலந்தாய்வு, வரும், 18ல், துவங்குகிறது. தமிழகத்தில், அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகள் என, 27 இடங்களில், இரண்டு ஆண்டு, டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு, 2,100 இடங்கள் உள்ளன; இதற்கு, 6,535 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, வரும், 18 முதல், 20 வரை, சென்னை, அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடக்கிறது.சுயநிதி கல்லுாரிகளில் காலியாக உள்ள, 2,100 பி.எஸ்சி., நர்சிங் படிப்புக்கான கலந்தாய்வு, வரும், 21 முதல், 27 வரை நடக்கிறது. இது தொடர்பான விரிவான விபரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.