Pages

Friday, September 23, 2016

’ஆன்லைன்’ கற்றல் முறையில் படித்து திறனை வளர்க்கவும்

நவீன ஆன்லைன் கற்றல் முறையில் தன்னை இணைத்துக் கொண்டு, போட்டி தேர்வுகளுக்கான வினா- விடைகளை படித்து, தனித்திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும், என, காந்திகிராம பல்கலை துணைவேந்தர் நடராஜன் பேசினார்.


காரமடையில் உள்ள டாக்டர் ஆர்.வி., கலை அறிவியல் கல்லுாரியில், 7வது பட்டமளிப்பு விழா நடந்தது. நிர்வாக அறங்காவலர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் ஆனந்தகோபால் வரவேற்றார். செயலாளர் சுந்தர் முன்னிலை வகித்தார்.

காந்திகிராம பல்கலை துணை வேந்தர் நடராஜன், மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:

தமிழகத்தில் தற்போது, 80 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்கள் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் கல்வி அறிவு பெறுவோர் சதவீதம் உயர்ந்து வருகிறது. தற்போது நவீன ஆன்லைன் கற்றல் முறையில் தன்னை இணைத்துக் கொண்டு, போட்டி தேர்வுகளுக்கான வினா-விடைகளை படித்து, தனித்திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பட்டம் பெற்றால் மட்டும் போதாது, படித்ததை திரும்ப படிக்கும் போது தான், இந்த போட்டி உலகில் நிலைத்திருக்க முடியும். இவ்வாறு, துணைவேந்தர் நடராஜன் பேசினார். பட்டம் பெற்ற, 125 மாணவ, மாணவியர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.