Pages

Monday, September 19, 2016

80 அரசு கல்லூரிகளில் 51 முதல்வர் பணியிடம் காலி!

51 அரசு கல்லுாரிகளில் முதல்வர் பணியிடம் காலியாக இருப்பதால், அடிப்படை பணிகள் பாதிக்கப்படுவதாக அரசு கல்லுாரி ஆசிரியர் மன்றம் குற்றம் சாட்டியுள்ளது. தமிழகத்தில் 80 அரசு கலைக்கல்லுாரிகள் உள்ளன. இவற்றில் 51 கல்லுாரிகளில் முதல்வர் இல்லாததால், பொறுப்பு முதல்வர்கள் உள்ளனர். இவர்களால் கொள்கை முடிவுகளை எடுக்க முடிவதில்லை. காலியிடங்கள் அதிகரித்து வருவதால் நிர்வாக பணிகளில் மட்டுமின்றி மாணவர்களின் கல்வி நலன் சார்ந்த உதவிகள் பெறுவதிலும் தொய்வு நிலை நீடிக்கிறது. 


புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் வெளிநாட்டு பல்கலை, ஆசிரியர்களை அனுமதிக்க கூடாது உட்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, காரைக்குடி அழகப்பா அரசு கலை கல்லுாரியில் அனைத்து கல்லுாரி ஆசிரியர் மன்ற மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.

மாநில தலைவர் லோகநாதன், பொது செயலாளர் சிவராமன் கூறியதாவது: முதல்வர் காலிப்பணியிடத்தால் கொள்கை முடிவுகள் எடுப்பதில் சிக்கல் நிலவுகிறது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர், துப்புரவு பணியாளர், அலுவலக உதவியாளர் காலியிடங்கள் உள்ளன. 10 ஆண்டுக்கு முன்பு அடிப்படை பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதன்பிறகு நியமிக்கப்படவில்லை.

மாணவர்களே வகுப்பறை, வளாகங்களை சுத்தம் செய்து வருகின்றனர்.1998-ல் பணி உயர்வு பெற்றோர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. தற்போது 5 ஆயிரம் ஆசிரியர்கள் பணி மூப்பை எதிர்நோக்கியுள்ளனர். பணிமூப்பு பட்டியல் வெளியிடாததால், துறை தலைவர்கள் நியமனத்தில் குழப்பம் ஏற்படுகிறது. 

3200-க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் கல்லுாரிகளில் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தி பணி வரன்முறை படுத்த வேண்டும், என்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.