Pages

Monday, September 19, 2016

’பார்கோடு’ முறை; மாணவர்கள் அதிர்ச்சிசெப்டம்பர் 19,2016,10:16 IST

ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு பார்கோடு விடைத்தாள் வழங்குவது குறித்த ஆலோசனையை தேர்வுத்துறை துவக்கி உள்ளது. பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வை, ஒவ்வொரு ஆண்டும், 18 லட்சம் மாணவர்கள் எதிர்கொள்கின்றனர். ஒரு மதிப்பெண் வினாக்கள் திருத்தும் போது, தவறுகள் ஏற்படுவதாக மாணவர், பெற்றோர் குற்றச்சாட்டுகளை முன் வைத்ததால், பிளஸ் 2 பொதுத்தேர்வு கணிணி அறிவியல் வினாத்தாளின் ஒரு மதிப்பெண் வினாவுக்கு பார்கேடு சீட் வழங்கப்பட்டது.


தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் பார்கோடில் விடைகளை எழுத வேண்டும். இதனால், தவறாக எழுதினாலும், திருத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

இம்முறையில், விடைத்தாளை ஆசிரியர் திருத்த தேவையில்லை என்பதால், நேரம் விரயமாவது தவிர்க்கப்படுகிறது. இதனால், மற்ற பாடங்களுக்கும், ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு, பார்கோடு முறை கொண்டு வருவது குறித்தான, ஆலோசனையை தேர்வுத்துறை துவக்கியுள்ளது.

நடப்பு கல்வியாண்டு, பொதுத் தேர்வில், இந்த நடைமுறை அமலுக்கு வர உள்ளது. இதனால், பிளஸ் 2 தேர்வை எதிர்கொள்ள உள்ள மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.