Pages

Monday, September 12, 2016

7 வது ஊதியக்குழுவின் ஊதியத்தை அமுல்படுத்த வேண்டுமென மத்திய அரசு கண்டிப்பு !

புதுச்சேரி பிரதேசம் மத்திய அரசின் நேரடி பார்வையில் இருந்து வருகிறது. மத்திய அரசு அமல்படுத்திய ஏழாவது ஊதிய உயர்வைக் கடந்த மூன்று மாதங்களாக புதுச்சேரி அரசு கிடப்பில் போட்டுவிட்டது. இதுதொடர்பாக, புதுச்சேரி அரசு ஊழியர்கள், மத்திய உள்துறைக்கு புகார்கள் அனுப்பியுள்ளார்கள். செப்டம்பர் 8ஆம் தேதி மத்திய உள்துறை  அமைச்சகத்திலிருந்து, துணைநிலை ஆளுநருக்கும், தலைமைச் செயலருக்கும் கடுமையான கண்டிப்புடன் போன்கால் வந்துள்ளது. அதைத் தொடர்ந்து, துணைநிலை ஆளுநர், முதல்வர் நாராயணசாமியை அவசரமாக அழைத்து கலந்து பேசினார். இதையடுத்து, இரவோடு இரவாக அமைச்சரவைக் கூட்டம் நடத்தினார் முதல்வர். அதைத் தொடர்ந்து, ஏழாவது ஊதியக்குழு அமல்படுத்துவது சம்பந்தமாக, செப்டம்பர் 9ஆம் தேதி சட்டமன்றக் கூட்டத்தில், ‘ஏழாவது ஊதிய உயர்வு அமல்படுத்தப்படுகிறது’ என்று அறிவித்தார் முதல்வர் நாராயணசாமி. அந்த தகவல்களைத் தலைமைச் செயலரும், துணைநிலை ஆளுநரும், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தெரியப்படுத்தியுள்ளார்கள். ‘மத்திய அரசு நேரடியாக தலையீட்டு கண்டிப்பு செய்தது இதுதான் முதன்முறை’ என்கிறார்கள் அமைச்சரவையில் உள்ளவர்கள்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.