Pages

Thursday, July 14, 2016

பள்ளி மாணவர்களுக்கு விரைவில் இலவச பஸ் பாஸ்

நிகழ் கல்வியாண்டில் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உத்தரவிட்டார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள அனைத்து மேலாண் இயக்குநர்களுடனான ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.


ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் பஸ் பாஸ்: இதில். அமைச்சர் பேசியதாவது:- வருவாயைப் பெருக்கிட அனைத்துப் பேருந்துகளையும் சிறப்பாகப் பராமரித்து சரியான நேரத்தில், பயணிகளின் தேவைக்கேற்ப இயக்க வேண்டும். வழித்தட முறிவு இல்லாமல் அனைத்து பேருந்துகளையும் இயக்க வேண்டும்.

நிகழ் கல்வி ஆண்டுக்கான இலவச பயண அட்டையை ஆகஸ்ட் 31-க்குள் அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும்.

விபத்துகளைத் தவிர்க்க ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு: முறையாக சுத்தம் செய்யப்படுகிறதா என்பதை உறுதி செய்த பின்தான் பேருந்துகளை வழித்தடத்தில் இயக்க அனுமதிக்க வேண்டும்.

உரிய அனுமதி பெறப்பட்டு நிலுவையில் இருக்கும் கூண்டு கட்டப்படாத பேருந்துகளுக்கு ஜூலை 31-க்குள் கூண்டு கட்ட விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

விபத்துகளைத் தவிர்க்க, ஒட்டுநர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். புதிய பணிமனைகளின் கட்டுமானப் பணிகளைத் துரிதப்படுத்தி விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழக முதல்வர் அறிவித்துள்ள நலத் திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் தொழில்-போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலர் சி.வி.சங்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.