Pages

Thursday, July 14, 2016

விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பங்கள் விநியோகம்

கல்வியியல் பயிற்சி நிறுவனங்களில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் ஜூலை 30 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி தெரிவித்தார்.


மேலும் அவர் கூறியதாவது: சென்னை ஆசிரியர் தேர்வு வாரியத்தால், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்ட கல்வியியல் பயிற்சி நிறுவனங்களில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை விருதுநகர் சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 15) முதல் 30 வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து) பெற்றுக் கொள்ளலாம்.

இதற்கான கட்டணம் ரூ.50. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 30 ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும். விண்ணப்பத்தினை வழங்கும் போது, அதனை நகல் எடுத்து வந்து, ஒப்படைத்ததற்கான ஒப்புதல் முத்திரையை விண்ணப்பதாரர்கள் பெற்றுச் செல்ல வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.