Pages

Thursday, July 21, 2016

ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்பட்ட நிதி பற்றிய முழு விவரம்

தமிழக சட்டப்பேரவையில் இன்று 2016-17ம் ஆண்டுக்கான  திருத்திய நிதிநிலை அறிக்கையில், ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்பட்ட நிதி பற்றிய முழு விவரத்தை இங்கே பார்க்கலாம்.

சமூக நலத்துறைக்கு ரூ.4,512 கோடி ஒதுக்கீடு.

பள்ளிக் கல்வித் துறைக்கு 24,130 கோடி ஒதுக்கீடு.

பள்ளிக் கட்டடங்களை மேம்படுத்த ரூ.330.60 கோடி ஒதுக்கீடு.


அனைவருக்கும் கல்வி வழங்க ரூ.125.70 கோடி ஒதுக்கீடு.

வனத்துறைக்கு நிதி ரூ.652.78 கோடி ஒதுக்கீடு.

உயர்கல்வி மாணவர் சேர்க்கை 44% அதிகரித்துள்ளது.

தமிழக உயர் கல்வித் துறைக்கு ரூ.3,679 கோடி ஒதுக்கீடு.

இடை நிலை கல்வி திட்டத்துக்கு ரூ.1,139 கோடி நிதி ஒதுக்கீடு.

மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் மடிக்கணினி, இலவச சீருடை திட்டத்துக்கு ரூ.2705 கோடி ஒதுக்கீடு.

முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களின் கல்வி செலவுக்கு ரூ.580 கோடி ஒதுக்கீடு.

போக்குவரத்துத் துறைக்கு 1,295.08 கோடி ஒதுக்கீடு.

தீயணைப்புத் துறைக்கு ரூ.230.7 கோடி ஒதுக்கீடு.

தொழிற்துறைக்கு ரூ.2104 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழகத்தில் சாலை மற்றும் மேம்பாலத் திட்டங்களுக்கு ரூ.1,230 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

கால்நடைத்துறைக்கு ரூ.1188 கோடி ஒதுக்கீடு.

பால்வளத்துறைக்கு ரூ.121 கோடி ஒதுக்கீடு.

காவல்துறையை நவீனமயமாக்க ரூ.68.62 கோடி ஒதுக்கீடு.

சிறைக் காவல்துறைக்கு ரூ.282.92 கோடி ஒதுக்கப்படுகிறது.

ஊரக வளர்ச்சித் துறைக்கு 21,186 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

முத்துலட்சுமி மகப்பேறு மருத்துவ திட்டத்துக்கு ரூ.668 கோடி ஒதுக்கீடு.

மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.9,073 கோடி ஒதுக்கீடு.

தொட்டில் குழந்தை திட்டத்துக்கு ரூ.140 கோடி ஒதுக்கீடு.

ஆறுகள் புத்துயிர் திட்டத்தின் கீழ் ரூ.24.58 கோடி நிதி ஒதுக்கப்படும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.