Pages

Thursday, July 21, 2016

தமிழக நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள்

தமிழக சட்டப்பேரவையில் இன்று 2016 - 17ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

தமிழக சட்டப் பேரவை இன்று காலை கூடியது. காலை 11 மணியளவில் கூடிய சட்டப்பேரவைக் கூட்டத்தில், நிகழ் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

அதன் சிறப்பம்சங்கள்,

தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.15,854 கோடி.

அடுத்த நிதியாண்டில் 3.50 லட்சம் இலவச வீட்டு முனைப் பட்டா வழங்கப்படும்.


காவல்துறையை நவீனமயமாக்க ரூ.68.62 கோடி ஒதுக்கீடு.

சிறைக் காவல்துறைக்கு ரூ.282.92 கோடி ஒதுக்கப்படுகிறது.

சாலைப் பாதுகாப்புக்கு ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

இலங்கை அகதிகள் நலனுக்கு ரூ.105 கோடி.

****

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசமாக இரு சக்கர வாகனங்கள் வழங்கப்படும்.

மாற்றுத் திறனாளிகள் நலனுக்கு ரூ.396.74 கோடி ஒதுக்கீடு.

சிறுபான்மையினர் மாதாந்திர உதவித் தொகை ரூ.1500 ஆக உயர்த்தப்படும்.

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 2000 புதிய பேருந்துகள் வாங்க ரூ.125 கோடி ஒதுக்கீடு.

தாலிக்கு தங்கம்  திட்டத்தின் கீழ் 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்துக்கு ரூ.703.16 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

****

கறவை மாடு வாங்குவதற்கான நிதி ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.35 ஆயிரமாக உயர்த்தப்படும்.

ஒரு லட்சம் குடும்பங்களுக்கு 4 லட்சம் ஆடுகள் வழங்கப்படும்.

கால்நடைத்துறைக்கு ரூ.1188 கோடி ஒதுக்கீடு.

பால்வளத்துறைக்கு ரூ.121 கோடி ஒதுக்கீடு.

பால்வளத்தை ஊக்குவிக்க மதுரையில் புதிய பால் பொருட்களை உற்பத்தி செய்யும் அலகு ஒன்று உருவாக்கப்படும்.

*****

100 கால்நடை கிளை மையங்கள், கால்நடை மருந்தகங்களாக தரம் உயர்த்தப்படும்.

மீன்வளத்துறைக்கு 743 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

சேலத்தில் 5 சாலைகள் சந்திப்பில் மேம்பாலப் பணிகள் துரிதப்படுத்தப்படும்.

தமிழகத்தில் சாலை மற்றும் மேம்பாலத் திட்டங்களுக்கு ரூ.1,230 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

1000 கிலோ மீட்டர் சாலைகள்  விரிவுபடுத்தப்படும்.

நெல்லை - கொல்லம்  தேசிய நெடுஞ்சாலை 4 வழிப்பாதையாக மாற்றப்படும்.

3000 கிலோ மீட்டர் சாலைகள் மேம்படுத்தப்படும்.

****

தமிழகத்தில் இணையதளம் வழியாகவே ரேசன் கார்டுகளில் முகவரி மாற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்று ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார்.

தமிழகத்தில் மின் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்.

மின்சார தேவைக்கும் உற்பத்திக்கும் இடையேயான இடைவெளி சரிசெய்யப்பட்டது.

நடப்பு ஆண்டில் ரூ.6,000 கோடி பயிர்க்கடன் வழங்கப்படும்.

தமிழகத்தில் சுற்றுலாத் தலங்கள் மேலும் மேம்படுத்தப்படும்.

தீயணைப்புத் துறைக்கு ரூ.230.7 கோடி ஒதுக்கீடு.

தொழிற்துறைக்கு ரூ.2104 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

****

மின்சார மானியத்துக்கு ரூ.9,007 கோடி ஒதுக்கீடு.

அடுத்த ஓராண்டில் 5 லட்சம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும்.

2 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி.

சாலைப் பாதுகாப்பு, கட்டமைப்புகளை மேம்படுத்த 315 கோடி ஒதுக்கீடு

****

தமிழகத்தில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்களின் மாநாட்டின் மூலம், ரூ.23,500 கோடி முதலீடுகள் பெறப்பட்டுள்ளன.

ஃபோர்டு நிறுவனம் தமிழகத்தில் மிகப்பெரிய வாகன ஆராய்ச்சி மையத்தை தொடங்க உள்ளது.

பொன்னேரி பிளாஸ்டிக் தொழில் முனையம் தேசிய அளவிலான மையமாக மேம்படுத்தப்படும்.

அடுத்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2017ம் ஆண்டு நடத்தப்படும்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தமிழகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும்.

****

ஐந்தாண்டுகளில் ஏழைகளுக்கு 10 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்.

சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கக் கூடிய அமைப்புடன் கூடிய 20 ஆயிரம் வீடுகள் ரூ.420 கோடி செலவில் கட்டப்படும்.

அடுத்த ஓராண்டில் 3.50 லட்சம் இலவச வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்கப்படும்.

மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.928 கோடி ஒதுக்கீடு.

வைகை, நொய்யல் ஆறுகள் தூர்வாரி மேம்படுத்தப்படும்.

ஆறுகள் புத்துயிர் திட்டத்தின் கீழ் ரூ.24.58 கோடி நிதி ஒதுக்கப்படும்.

****

.

சமூக நலத்துறைக்கு ரூ.4,512 கோடி ஒதுக்கீடு.

பள்ளிக் கல்வித் துறைக்கு 24,130 கோடி ஒதுக்கீடு.

பள்ளிக் கட்டடங்களை மேம்படுத்த ரூ.330.60 கோடி ஒதுக்கீடு.

அனைவருக்கும் கல்வி வழங்க ரூ.125.70 கோடி ஒதுக்கீடு.

வனத்துறைக்கு நிதி ரூ.652.78 கோடி ஒதுக்கீடு.

உயர்கல்வி மாணவர் சேர்க்கை 44% அதிகரித்துள்ளது.

தமிழக உயர் கல்வித் துறைக்கு ரூ.3,679 கோடி ஒதுக்கீடு.

இடை நிலை கல்வி திட்டத்துக்கு ரூ.1,139 கோடி நிதி ஒதுக்கீடு.

மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் மடிக்கணினி, இலவச சீருடை திட்டத்துக்கு ரூ.2705 கோடி ஒதுக்கீடு.

முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களின் கல்வி செலவுக்கு ரூ.580 கோடி ஒதுக்கீடு.

போக்குவரத்துத் துறைக்கு 1,295.08 கோடி ஒதுக்கீடு.

தீயணைப்புத் துறைக்கு ரூ.230.7 கோடி ஒதுக்கீடு.

தொழிற்துறைக்கு ரூ.2104 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழகத்தில் சாலை மற்றும் மேம்பாலத் திட்டங்களுக்கு ரூ.1,230 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

கால்நடைத்துறைக்கு ரூ.1188 கோடி ஒதுக்கீடு.

பால்வளத்துறைக்கு ரூ.121 கோடி ஒதுக்கீடு.

காவல்துறையை நவீனமயமாக்க ரூ.68.62 கோடி ஒதுக்கீடு.

சிறைக் காவல்துறைக்கு ரூ.282.92 கோடி ஒதுக்கப்படுகிறது.

ஊரக வளர்ச்சித் துறைக்கு 21,186 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

முத்துலட்சுமி மகப்பேறு மருத்துவ திட்டத்துக்கு ரூ.668 கோடி ஒதுக்கீடு.

மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.9,073 கோடி ஒதுக்கீடு.

தொட்டில் குழந்தை திட்டத்துக்கு ரூ.140 கோடி ஒதுக்கீடு.

ஆறுகள் புத்துயிர் திட்டத்தின் கீழ் ரூ.24.58 கோடி நிதி ஒதுக்கப்படும்.

****

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.