Pages

Saturday, July 2, 2016

வி.ஏ.ஓ., தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு

அரசு துறையில் காலியாக உள்ள, 813 கிராம நிர்வாக அலுவலர் எனப்படும், வி.ஏ.ஓ., பணியிடங்களுக்கு, எட்டு லட்சம் பேர் எழுதிய எழுத்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசு துறையில் காலியாக உள்ள, 813 வி.ஏ.ஓ., பணியிடங்களுக்கு, பிப்., 28ல், எழுத்துத் தேர்வு நடந்தது; 7.71 லட்சம் பேர் பங்கேற்றனர். இவர்களில், 7.61 லட்சம் பேரின் மதிப்பெண், தரவரிசை நிலை போன்றவை, தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.


தேர்வர்களின் மதிப்பெண் அடிப்படையில், பொது தரவரிசை நிலை, வகுப்பு வாரியான தரவரிசை நிலை, சிறப்புப் பிரிவு விண்ணப்பதாரர்களுக்கான தனி தரவரிசை நிலை ஆகியவையும் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் தரவரிசை நிலை ஆகியவற்றை, தங்கள் பதிவு எண் மூலம் அறிந்து கொள்ளலாம். தேர்வர்கள், ஆகஸ்ட், 1 முதல், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர். அவர்களின் தரவரிசை நிலை, காலியிட நிலை மற்றும் இடஒதுக்கீட்டு விதிப்படி, கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர். கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவோரின் பட்டியல், விரைவில் தேர்வாணைய இணையதளத்தில் வெளியாகும். மேலும், தேர்வில் பங்கேற்று, குறைந்தபட்ச மதிப்பெண் பெறாதவர்களின் மதிப்பெண்களும் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.