அரசின் அனைத்து துறைகளிலும், அலுவலகங்கள் (ம) நிறுவனங்களில் எல்லா நிலைகளிலும் தொகுப்பூதியத்தில் பணி செய்பவர்களை, தினக்கூலிகளாக பணி செய்பவர்களை, ஒப்பந்த அடிப்படையில் பணி செய்பவர்களை, பகுதிநேரமாக பணி செய்பவர்களை, தற்காலிகமாக பணி செய்பவர்களை மத்திய-மாநில அரசுகள் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
18 வயது முடித்த அனைவருக்கும் கல்வித் தகுதிக்கேற்ப வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவதை முதன்மைப் பணியாக செய்ய வேண்டும். அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு உறுதிப்படுத்த அவசர சட்டம் இயற்றப்படவேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் சிதம்பரத்தில் இன்று மே தினத்தை ஒட்டி நடந்த கூட்டத்தில் அனைவராலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் வருகிற மே-16 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 100% வாக்குப்பதிவை ஈடு செய்ய பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஊட்ட உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.