Pages

Tuesday, May 3, 2016

பிளஸ் 2 ரிசல்ட் எப்போது? மாணவர்கள் திக்... திக்..

பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகும் நாள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்புக்காக, மாணவ, மாணவியர் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.பிளஸ் 2 தேர்வு, மார்ச், 4ல் துவங்கி, ஏப்., 1ல் நிறைவடைந்தது. விடைத்தாள் திருத்தும் பணி முடிந்து, மதிப்பெண் விவரங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு,"சிடி' மூலம், அரசு தேர்வுகள் இயக்ககம் வசம் ஒப்படைக்கப்பட்டது. தேர்வு முடிவை எதிர்பார்த்து மாணவ, மாணவியர், அவர்களது பெற்றோர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

கடந்தாண்டு, பிளஸ் 2 தேர்வு முடிவு, மே 7ல் வெளியானது. அதேபோல், நடப்பு ஆண்டும் மே முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அரசு தேர்வுத்துறை இயக்ககத்தில் இருந்து, இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. கல்வித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, "பிளஸ் 2 தேர்வு முடிவு, மே 9 அல்லது, 10ல் வெளியாகலாம் என்பது உறுதிப்படுத்தப்படாத தகவல். அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு, காத்திருக்கிறோம்' என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.