Pages

Tuesday, May 17, 2016

இயற்பியலில் 5 மாணவர்களே சென்டம்

தமிழகத்தில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இயற்பியல் பாடத்துக்கான வினாத்தான் மிகக் கடினமாக இருந்ததால் 5 மாணவர்கள் மட்டுமே 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். அதே போல பெரும்பாலான பாடங்களில் 200க்கு 200 மதிப்பெண் எடுத்த மாணாக்கரின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு குறைந்துள்ளது.


பாட வாரியாக 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களைப் பார்க்கலாம்.

உயிரியல் பாடத்தில் 775 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

தாவரவியலில் 20 பேரும் விலங்கியலில் 10 பேரும் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

இயற்பியலில் 5 பேரும் வேதியியலில் 1703 பேரும்  200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

கணக்குப் பதிவியல் பாடத்தில் 4,341 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் பிடித்துள்ளனர்.

303 மாணவர்கள் கணினி அறிவியலில் முழு மதிப்பெண்களை பெற்றுள்ளனர். 3,084 மாணவர்கள் வணிகவியல் பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

வணிகக் கணிதம் பாடத்தில் 1072 மாணவர்கள் 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.