Pages

Wednesday, April 27, 2016

வாக்குசாவடி தலைமை அலுவலர்கள் பணி:(வாக்கு பதிவு தொடங்குவதற்கு முன்) TIPS 2

வாக்குபதிவு அலுவலர்கள், போலீசார் அனைவரும் வந்துள்ளனரா என்பதை உறுதி செய்து, வரவில்லை எனில் மண்டல அலுவலருக்கு தகவல் தெரிவித்து அவர்கள் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்குசாவடியில் போதுமான இட வசதி, வாக்காளர்கள் உள்ளே நுழையவும், வெளியேறவும் தனித்தனி வழிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

* வாக்குசாவடிக்குள் எந்த ஒரு அரசியல் தலைவரின் படம் இருந்தாலும் அதனை நீக்கிவிட வேண்டும்

அல்லது அதனை முழுமையாக மூடிவிட வேண்டும்.
வாக்குசாவடிக்கு வெளியே வாக்குசாவடியின் பரப்பு, வாக்காளர் விபரம், வேட்பாளர் விபர பட்டியலை ஒட்டி வைக்க வேண்டும்.
* வாக்குசாவடியின் 100 மீட்டர் சுற்றளவுக்குள் எந்தவிதமான அரசியல் விளம்பரங்களோ,
200 மீட்டர் சுற்றளவுக்குள் பந்தல்களோ அமைக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

வாக்குபதிவு தொடங்கும் 1 மணி நேரத்திற்கு முன்னதாக காலை 6 மணிக்கு ஒத்திகை வாக்குபதிவு நடத்த வேண்டும்.
ஒத்திகை வாக்குபதிவின்போது வாக்குசாவடி அலுவலர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

முகவர்கள் வரவில்லை எனில் 15 நிமிடம் காத்திருந்து பின்னர் ஒத்திகை வாக்குபதிவு நடத்த வேண்டும்.
காலை 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்க வேண்டும்

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.