Pages

Tuesday, April 26, 2016

அரசு ஊழியரின் 2வது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் இல்லை: ஐகோர்ட்

அரசு ஊழியரின் முதல் மனைவி இருக்கும் போது அல்லது முதல் மனைவி இறந்த பின், இரண்டாவது திருமணம் செய்திருந்தால், அப்பெண் குடும்ப ஓய்வூதியம் கோர முடியாது' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி முதுவயலைச் சேர்ந்தவர் வேலு; வனத்துறையில் வனக்காப்பாளராக பணியாற்றினார்.


இவரது முதல் மனைவி முனியம்மாள்; இவருக்கு இரண்டு குழந்தைகள். பாக்கியம் என்பவரை வேலு இரண்டாவது திருமணம் செய்தார். பாக்கியத்திற்கு மூன்று குழந்தைகள். கடந்த, 2003ல் வேலு இறந்தார். பாக்கியம், குடும்ப ஓய்வூதியம் வழங்கக் கோரி, அரசின் தலைமை கணக்காயருக்கு மனு தாக்கல் செய்தார். இவரது மனு நிராகரிக்கப்பட்டது.இதை ரத்து செய்யக்கோரி பாக்கியம், உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா உத்தரவு:
முதல் மனைவி இருக்கும்போது, இரண்டாவது திருமணம் செய்தால், அப்பெண் சட்டப்பூர்வமாக எந்த உரிமையும் கோர முடியாது. ஓய்வூதிய விதிகள்படி, முதல் மனைவிக்குத்தான் சட்டப்பூர்வ உரிமைகள் உள்ளன. முதல் மனைவி இறந்த பின், இரண்டாவது திருமணம் செய்திருந்தாலும், அப்பெண் சட்டப்பூர்வ உரிமைகளை கோர முடியாது. தலைமை கணக்காயரின் உத்தரவை உறுதி செய்து, மனுவை தள்ளுபடி செய்கிறேன். இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.