Pages

Tuesday, April 26, 2016

பணி நேரத்துக்கு வரம்பு வகுக்க வேண்டும்:காவல்துறை ஆணையருக்கு காவலர் பகிரங்க கடிதம்

காவல் துறையில் பணியாற்றும் தன்னைப் போன்றோருக்கு பணி நேர வரம்பை வகுக்க வேண்டும் என்று தில்லி காவல் துறை ஆணையர் அலோக் வர்மாவுக்கு காவலர் ஒருவர் பகிரங்கமாக கடிதம் எழுதியுள்ளார். இது பற்றி காவல் ஆணையர் அலோக் குமார் வர்மாவுக்கு அந்தக் காவலர் அண்மையில் எழுதியுள்ள கடிதம் ஊடகங்களில் கசிந்துள்ளது. அதன் விவரம்:


தில்லி காவல் துறையில் நான் கடந்த 25 ஆண்டுகளாகக் காவலராகப் பணியாற்றி வருகிறேன். இதுவரை பணிக் காலத்தில் எந்த தண்டனைக்கும் உள்ளானது கிடையாது. என்னுடன் பணிபுரிந்தவர்கள், பதவி உயர்வு பெற்று தலைமைக் காவலராகவும், உதவி காவல் ஆய்வாளராகவும் உள்ளனர்.

ஆனால், இதுவரை எனக்குப் பணி உயர்வு வழங்கப்படவில்லை. இதுபற்றி உயரதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினால், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்குமாறு அறிவுறுத்துகின்றனர். மேலும், தற்போது தலைமைக் காவலர், உதவி காவல் ஆய்வாளர் பதவிக்கு வயது வரம்பு 40-லிருந்து 30-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வயது வரம்பு நிலை, நம் நாட்டில் வேறு எந்தப் பணியிலும் ஏற்படுத்தவில்லை.

இதேபோல ஒவ்வொரு காவல் நிலையத்திலும் காவல் ஆய்வாளர்களின் கைப்பாவையாக மட்டுமே காவலர்கள் செயல்பட்டு வருகின்றனர். எனவே, காவலராகப் பணியாற்ற வரும் இளம் தலைமுறையினரின் நிலையாவது மாற வேண்டும். அதற்கேற்ப காவலர்களுக்கான பணி வரன்முறைகளை மாற்றி அமைக்க வேண்டும். அவர்களுக்கான (காவலர்) பணி நேரத்தை 8, 12, 24 மணி நேரம் என அமைக்க வேண்டும். இதுதவிர காவல் நிலையத்தின் தரத்தை உயர்த்தி, ஊழலை அகற்ற கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.