Pages

Tuesday, April 26, 2016

கணினி ஆசிரியர்களுக்கான தேசிய விருது: மே 31-க்குள் அனுப்ப கல்வித்துறை அறிவுறுத்தல்

நிகழ் கல்வியாண்டில் கணினி வழிக் கல்வியில் சிறப்பாகச் செயல்படும் ஆசிரியர்களைத் தேர்வு செய்து மே 31-ஆம் தேதிக்கு முன் அனுப்புமாறு முதன்மைக் கல்வி அலுவலர்களை பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.


ஆண்டுதோறும் கணினி வழிக் கல்வியில் சிறப்பாகச் செயல்படும் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மத்திய கல்வியியல் தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் நிகழ் கல்வியாண்டில் கணினி வழிக்கற்றல் திட்டத்தின் கீழ் சிறந்த ஆசிரியர்களுக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது. 

அதன்படி நிகழ் கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பாகச் செயல்படும் தகுதியுடைய கணினி ஆசிரியர்கள் சார்ந்த விவரங்களை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மே 31-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

எனவே மாவட்ட வாரியாக மூன்று ஆசிரியர்களைத் தேர்வு செய்து, அந்த ஆசிரியர்கள் சார்ந்த விவரங்களை ஏற்கனவே வழங்கப்பட்ட படிவங்களுடன் இணை இயக்குநர்(தொழிற்கல்வி) பெயரிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இந்தத் திட்டம் ஆசிரியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதால் முதன்மைக் கல்வி அலுவலர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும். இதுகுறித்த விவரங்கள் அறிய www.ciet.nic.in, www.ncert.nic.in என்ற இணையதளங்களைப் பார்வையிடலாம்.

மாவட்டத் தேர்வுக் குழு தலைவர், ஆசிரியர் சார்பான கருத்துகளை பரிந்துரைக்கும்போது எந்தவித புகாருக்கும், குற்றச்சாட்டிற்கும், ஒழுங்கு நடவடிக்கைக்கும் உட்படாதவர், நீதிமன்ற வழக்குகளுக்கு உள்படாதவர் என சான்றளிக்கப்பட வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு செய்தியில் அறுவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.