Pages

Friday, April 22, 2016

மே இறுதிக்குள் பள்ளி பஸ்கள் ஆய்வு

அனைத்து பள்ளி, கல்லூரி பஸ்களின் நிலை குறித்து ஆய்வு நடத்தி, மே இறுதிக்குள் சான்றிதழ் வழங்க வேண்டும் என, ஆர்.டி.ஓ., அலுவலகங்களுக்கு, தமிழக போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில், 37 ஆயிரத்து, 105 வாகனங்கள் இயங்குகின்றன. பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கு, போக்குவரத்து துறை பல விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும்; விபத்துகால அவசர வழி இருக்க வேண்டும். குழந்தைகளை ஏற்றி, இறக்க, ஒவ்வொரு வாகனத்துக்கும் உதவியாளர் இருத்தல் வேண்டும் என்பன உள்ளிட்ட, 32 பாதுகாப்பு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இவற்றை கடைபிடிக்கும் வாகனங்களுக்கு மட்டுமே, தகுதி சான்று வழங்கப்படும்.

பள்ளி, கல்லூரி வாகனங்கள், ஆண்டுதோறும் மூன்று முறை சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. நடப்பு ஆண்டுக்கான முதல்கட்ட ஆய்வு, இம்மாதம் நடக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது.

சட்டசபை தேர்தலால், இதுகுறித்து, எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படாமல் இருந்தது. தற்போது, தமிழக போக்குவரத்து துறை தரப்பில் இருந்து, அனைத்து மண்டல போக்குவரத்து கமிஷனர்களுக்கும், சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில், ஆர்.டி.ஓ.,க்கள், போக்குவரத்து ஆய்வாளர்கள், தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று, வாகனங்களின் நிலையை ஆய்வு செய்ய வேண்டும். 

இப்பணியை, மே மாதத்துக்குள் முடித்து, அடுத்த கல்வியாண்டு துவங்கும் முன், அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்;குறைபாடு இருப்பின், தகுதிச்சான்று வழங்கக்கூடாது; பெர்மிட்டை ரத்து செய்ய வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.