Pages

Friday, April 22, 2016

தனித்தேர்வர்கள் ’பிட்’ அடித்து உற்சாகம்!

தேனியில் நேற்று நடந்த 8ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான கணிதத்தேர்வில் கல்வித்துறை அதிகாரிகளின் ஆசியோடு, பலர் பிட் அடித்ததாக புகார் எழுந்துள்ளது. தனித்தேர்வர்களுக்கான 8ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்.18ம் தேதி துவங்கி 23ம் தேதி வரை நடக்கிறது. தேனியில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை கணிதத்தேர்வு நடந்தது.
200க்கும் மேற்பட்டோர் எழுதினர். தேர்வு மைய பொறுப்பாளர்களான கல்வித்துறை உயர் அதிகாரிகளை முன்கூட்டியே கவனித்த தனித்தேர்வர்கள் சிலர், அங்கு தனி அறையில் தேர்வெழுதினர். கேட்கப்பட்ட வினாக்களுக்கு உரிய விடைகளின் ஜெராக்ஸ் அவர்களுக்கு வழங்கி, உற்சாகமாக தேர்வெழுத அனுமதிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

அங்கு பணியில் இருந்த ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ஓட்டுனர் உரிமம், அரசு பணியில் பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பலரும் 8ம் வகுப்பு தனித்தேர்வு எழுதுவதுண்டு. அதிக மதிப்பெண் பெறுவதை விட தேர்ச்சியே அவர்களின் முக்கிய நோக்கம். கணிதத்தேர்வில் குறிப்பிட்ட நபர்களுக்கு விடைகளின் நகல்கள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம், என்றார். 

முதன்மைகல்வி அலுவலர் வாசு கூறுகையில், தேனியில் நேற்று நடந்த 8ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான கணிதத்தேர்வில் கடைசி நேரத்தில் பலருக்கு விடைகளின் ஜெராக்ஸ் வழங்கப்பட்டு, அவர்கள் பிட் அடித்து எழுதியாக புகார் வந்தது. 

இப்பிரச்னை குறித்து விசாரிக்க, பெரியகுளம் மாவட்ட கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளேன். தவறு நடந்திருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

அதிக மதிப்பெண் பெறுவதை விட தேர்ச்சியே அவர்களின் முக்கிய நோக்கம். கணிதத்தேர்வில் குறிப்பிட்ட நபர்களுக்கு விடைகளின் நகல்கள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.