Pages

Friday, April 1, 2016

தேர்வு முடிவு என்னாச்சு? மீண்டும் அறிவிச்சா எப்படி?

தமிழகத்தில் அரசு ஊழியர் களுக்கான துறை தேர்வுகளின் முடிவு வெளியிடுவதற்குள் டி.என்.பி.எஸ்.சி., சார்பில் மீண்டும் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.


அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு, தகுதி பெறுதல், துறைசார்ந்த தகவல் தெரிந்துகொள்ளுதல் ஆகியவற்றிற்காக ஒவ்வொரு ஆண்டும் டிச., மே மாதங்களில் டி.என்.பி.எஸ்.சி., சார்பில் துறை தேர்வுகள் நடத்தப்படும். கடந்த டிச.,ல் நடந்த தேர்வை மாவட்டத்திற்கு குறைந்தபட்சம் தலா 3 ஆயிரம் பேர் எழுதினர். இதற்கான முடிவுகள் மார்ச் முதல் வாரத்தில் வெளியிட்டிருக்க வேண்டும். அப்படி வெளியிடும் பட்சத்தில் தான், மே மாதம் நடத்தப்பட வேண்டிய தேர்வுக்கு மார்ச்சில் அறிவிப்பு வெளியிட முடியும்.

ஆனால், கல்வித்துறையில் புள்ளியியல், துணை ஆய்வாளர் தேர்வுகள் மற்றும் பிற துறைகளில் சார்நிலை அலுவலர் 1 மற்றும் இரண்டாம் கிரேடு, செயல் அலுவலர் உட்பட பல பிரிவுகளில் தேர்வு எழுதிய ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு இதுவரை முடிவுகள் வெளியிடவில்லை. 

ஆனால் அதற்குள் மே மாதம் தேர்வு அறிவிக்கப்பட்டு, விண்ணப்பிக்க மார்ச் 31 (இன்று) கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டிச., தேர்வு முடிவு தெரியாமல் மீண்டும் தேர்வு எழுதுவதா, வேண்டாமா என ஊழியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

அவர்கள் கூறுகையில், மே மாதம் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கடைசி தேதியை ஏப்ரல் 11 வரை நீடித்துள்ளதால், அதற்குள் டிச., தேர்வு முடிவை வெளியிட வேண்டும். முடிவு வெளியிடாமல் மே மாதம் தேர்வை டி.என்.பி.எஸ்.சி., நடத்தக்கூடாது. அப்படி நடத்தும்பட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம், என்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.