Pages

Friday, April 1, 2016

மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பம் எப்போது?

இன்ஜினியரிங் படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், ஏப்., 15ல் துவங்குகிறது. அதே நேரத்தில், மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்ப வினியோகம் எப்போது துவங்கும் என, மாணவர்கள் எதிர்பார்த்து உள்ளனர். பிளஸ் 2 தேர்வுகள், இன்றுடன் முடிகின்றன. ஏப்ரல் மாத இறுதியில், தேர்வு முடிவுகள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஜி., படிப்பு களுக்கான விண்ணப்ப வினியோகம், ஏப்., 15ல் துவங்கும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. 


பொதுவாக, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான கலந்தாய்வு முடிந்த பிறகே, இன்ஜி., படிப்புகளுக்கான கலந்தாய்வு துவங்கும். இன்னும் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் குறித்து, முறையான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. 

எப்போது இந்த அறிவிப்பு வெளியாகும் என, மருத்துவ படிப்பில் சேர ஆர்வமுடன் உள்ள மாணவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். தேதி முடிவாகி விட்டது. ஒப்புதல் பெற்று, ஓரிரு நாளில் தகவல் வெளியிடப்படும்&' என, மருத்துவ கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.