Pages

Wednesday, April 20, 2016

கொளுத்தும் வெயிலால் குலை நடுங்கும் மாணவர்கள். பள்ளி வேலை நாட்களை குறைத்து விடுமுறை அறிவிக்க தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. வெப்பத்தின் கொடுமை தாங்காமல் பொதுமக்களே வெளியில் நடமாடுவதை தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில் தொடக்க நடு
நிலைப்பள்ளிக்கு வருகிற 30ந் தேதி வரை பள்ளி வேலை நாட்களாக இருப்பதால் மாணவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே பள்ளி வேலை நாட்களை குறைத்து உடனடியாக விடுமுறை அறிவிக்க வேண்டும் என ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் தொடக்கக்கல்வி இயக்குனருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது; 

                        
தமிழ்நாட்டில் கோடை வெப்பம் பல இடங்களில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வருகிறது. இதனால் ஆரம்பப்பள்ளி மாணவர்கள் வெப்ப நோய்கள் தாக்குதலுக்கு உள்ளாகி அவதியுற்று வருகின்றனர். பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் ஏப்ரல் 20ந் தேதியுடன் வேலைநாட்களை நிறைவு செய்து விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால் தொடக்கக்கல்வித்துறையின் கீழ் உள்ள தொடக்க நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு வருகிற 30ந் தேதி வரை பள்ளி வேலை நாட்கள் உள்ளதால் மாணவர்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

                        தொடக் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு வருகிற வாரத்தில் தொடங்க உள்ள மூன்றாம் பருவத் தேர்வை முற்பகல் மற்றும் பிற்பகல் என இருவேளைகள் நடத்தி நிறைவு செய்து பள்ளிகளுக்கு உடனடியாக விடுமுறை அறிவிக்க வேண்டும். கட்டாய கல்வி உரிமைச்சட்டதின் சரத்தை அடிப்படையாக வைத்து மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடக்கக்கல்வித் துறையை எங்கள் அமைப்பின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

                        ஒவ்வொரு நாளும் வெயிலின் உக்கிரம் கூடிக்கொண்டே செல்கிறது. பகல் வேலையில் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டுமென ஊடகங்களும் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. குறிப்பாக வறட்சியாக உள்ள தென் மாவட்டங்களில் வெயில் தாக்கம் அதிகம் உள்ளதால் வகுப்பறை புழுக்கமாக உள்ளது. இதனால் ஆரம்பப்பள்ளி மாணவர்கள் மிகவும் அவதியுற்று வருகின்றனர்.  எனவே தற்பொழுது நடைமுறையில் உள்ள தட்ப வெப்ப நிலையை கருத்தில்கொண்டு பள்ளிகளின் வேலை நாட்களை குறைத்து விடுமுறை விடுவதுடன் வருகிற கல்வி ஆண்டில் பள்ளி திறக்கும் நாளையும் முடிவு செய்ய வேண்டும் என தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.