Pages

Friday, April 8, 2016

இந்த தமிழனையும் தெரிந்துகொள்ளுங்கள்... கல்யாணசுந்தரம்

45 வருடங்களாக சமூக சேவை செய்து வருபவர், 30 வருடங்களாக நூலக பொறுப்பாளராக இருந்து, உலகத்திலே தனது வாழ்நாளில் கிடைக்கும் மொத்த சம்பளத்தையும் இல்லாதவர்களுக்கு ஒதுக்கும் ஒரே நபர் இவர் மட்டும் தான். தன் தேவைக்காக உணவகத்தில் உணவு பரிமாறும் வேலை செய்து வருகிறார்.

இதை பாராட்டும் வகையில் ஒரு அமெரிக்க அமைப்பு, இவர்க்கு "மேன் ஆப் மில்லினியம்" பட்டம் கொடுத்தனர், 30 கோடி அன்பளிப்பு அளித்தனர். அதையும் வழக்கம் போல் அனாதை இல்லத்திற்கு கொடுத்துவிட்டார்.

* நூலக அறிவியல் பாடப் பிரிவில் தங்கப் பதக்கம் பெற்றவர்.

* மத்திய அரசின் சிறந்த நூலகப் பொறுப்பாளர் விருது பெற்றவர்.

* உலகத்தின் தலை சிறந்த பத்து நூலக பொறுப்பாளர்களில் இவரும் ஒருவர்.

இப்படிப்பட்ட தமிழனை நம்மில் எத்தனைபேருக்கு தெரியும், அதுவும் சிலருக்கு ரஜினிகாந்த் அவர்கள் இவரை தன் தத்து தந்தையாய் அறிவித்த பிறகே தெரியும்.

தன் வாழ்வில் கல்யாணம் கூட செய்துகொள்ளாமல், இயலாதவர்களுக்கு அள்ளிக்கொடுக்கும் இவருக்கு வழாக்கம் போல எந்த ஒரு ஊடகமும் இச்செய்தியை  வெளியிடாதது வருத்தமளிக்கிறது.

1 comment:

  1. அவர் வாழ்க வளமுடன்

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.