தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் சங்க பொதுகுழுக் கூட்டம், மாநில தலைவர் கனகராஜ் தலைமையில், பொதுச் செயலர் நந்தகுமார் முன்னிலையில், சென்னையில் நடந்தது. இதில், தனியார் பள்ளிகளின் பல்வேறு பிரச்னைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின், 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம்:தமிழகத்தில், 20 ஆண்டு களுக்கு முன் கட்டப்பட்ட, பழைய பள்ளி கட்டடங்களுக்கு, உள்ளாட்சி அமைப்புகளின் திட்ட அனுமதி வேண்டும் என்ற முறையை, பள்ளிக்கல்வித்துறை கைவிட வேண்டும்.
நில அளவு தொடர்பான அரசாணை வெளியிடும் முன் கட்டப்பட்ட பள்ளிகளுக்கு, நில அளவை கருதாமல், அங்கீகாரம் வழங்க வேண்டும். நில அளவு தொடர்பாக அமைக்கப்பட்ட, வல்லுனர் குழு அறிக்கையை அரசு வெளியிட்டு, அரசாணை பிறப்பிக்க வேண்டும் தரமற்ற சமச்சீர் கல்வியை ரத்து செய்து, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., கல்வி முறையை கொண்டு வர வேண்டும்; முப்பருவ முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
தமிழகத்தில், மும்மொழி கல்வித் திட்டத்தை கொண்டு வர வேண்டும்கடந்த, 2005 முதல் மாற்றப்படாத பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டத்தை மாற்றி, புதிய பாடத்திட்டம் கொண்டு வர வேண்டும்எட்டாம் வகுப்பு வரை, 'ஆல் பாஸ்' செய்யும் திட்டத்தால், தமிழக பள்ளிக்கல்வியின் தரம் தாழ்ந்து விட்டது. எனவே, உடனடியாக இந்த திட்டத்தை ரத்து செய்து விட்டு, படித்து தேர்ச்சி பெற்றால் மட்டுமே பாஸ் செய்ய வேண்டும் என்ற, புதிய சட்டம் தேவை
கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களுக்கான, கல்வி கட்டணம், 150 கோடி ரூபாய் பாக்கி உள்ளது. அதை உடனே வழங்க வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
My Blogger Tricks
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.