பிளஸ் 2 வேதியியல் பாட விடைத்தாள் திருத்தும் பணி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்ட்டுள்ளது. கடந்த மார்ச் 14-ம் தேதி பிளஸ் 2 வேதியியல் படிப்புக்கான தேர்வு நடத்தப்பட்டது. தேர்வில் கடினமான வினாக்கள் இடம் பெற்றிருந்ததாகத் தேர்வு எழுதிய மாணவர்கள், வேதியியல் பாட ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
வேதியியல் தேர்வில் கேள்விகள் கடினமாக இருந்ததால் விடைத்தாள் திருத்தும் பணி தள்ளிவைக்க வேண்டும் என்றும், மறுதேர்வு நடத்த வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கடினமான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்க கல்வியாளர்கள் சிலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நாளை நடக்கவிருந்து வேதியியல் விடைத்தாள் திருத்தும் பணி, தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.