Pages

Thursday, February 25, 2016

அரசு பள்ளி மாணவர்களுக்கு அமெரிக்காவில் இலவச கல்வி!

அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் இலவசமாக, அமெரிக்காவில் படிக்க, சென்னையில் உள்ள அமெரிக்க துணை துாதரகம் புதிய திட்டத்தை அறிவித்து உள்ளது. அமெரிக்காவில், 4,500 பல்கலைகளில், இன்ஜினியரிங், அறிவியல் மற்றும் கலை படிப்புகளில், வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்திய மாணவர்கள் ஆர்வம்சமீப காலமாக, அரசியல் அறிவியல், சமூகவியல் போன்ற கலை படிப்புகளிலும் இந்திய மாணவர்கள் அதிகம் சேர்வதாக, அமெரிக்க துாதரக அதிகாரிகள் தெரிவித்தனர். 


அமெரிக்காவில் படிப்பதற்கான வசதிகள் குறித்து, கல்வி குழும அதிகாரிகள் மாயா சுந்தராஜன், மீரா சேஷாத்ரி ஆகியோர் கூறியதாவது: அமெரிக்காவில் படிக்க, முதலில், துாதரக கல்வி தகவல் மையத்தில், 6,000 ரூபாய் செலுத்தி உறுப்பினராக சேர வேண்டும். விசா பெறுவது முதல், பல்கலையில் சேர்த்து அவர்களுக்கு தங்கும்மிடம் வழங்குவது வரை அனைத்தையும், அமெரிக்க துாதரக கல்வி தகவல் மையமே ஏற்றுக் கொள்ளும்.


ஆங்கில திறன் தேர்வுமாணவருக்கு கண்டிப்பாக ஆங்கில திறன் தேர்வு உண்டு. திறன் குறைவாக இருந்தால், அதற்கு சிறப்பு பயிற்சி தருவோம். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களை, அமெரிக்காவில் படிக்க வைக்க, நடப்பு ஆண்டில் புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. சிறந்த தேர்ச்சி பெற்ற, மதிப்பெண்ணில் முன்னணியில் உள்ள, ஏழை மாணவர், அமெரிக்காவில் படிக்க விரும்பினால், அவருக்கு கல்வி உதவித்தொகை வழங்கி இலவசமாக படிக்க வைப்போம்.

இந்த அடிப்படையில், சென்னை துாதரகத்தில் இந்த ஆண்டு, 50 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், சென்னை அரசு பள்ளி சமச்சீர் கல்வி மாணவர்களும் உண்டு. அவர்களில், இரண்டு பேர் தேர்வு செய்யப்படுவர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

உரிய நடவடிக்கை

இந்தியாவில் இருந்து, 2014 - 15ம் கல்வியாண்டில், 1.32 லட்சம் பேர் அமெரிக்காவிற்கு படிக்க சென்றனர். இந்த ஆண்டு, இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறோம். அமெரிக்கா வுக்கு வரும் மாணவர்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாமல், அவர்கள் தங்கள் படிப்பு காலம் முழுவதும் பாதுகாப்பாக தங்கி படிக்க, அமெரிக்க அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. பிலிப் ஏ மின் அமெரிக்க துணை துாதர்

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.