Pages

Thursday, February 25, 2016

போலி மருத்துவ கல்லூரி; நடவடிக்கை எடுக்க சி.ஐ.சி., உத்தரவு

போலி டாக்டர்கள், போலி மருத்துவ சான்றிதழ்கள் விவகாரம் பற்றி மத்திய தகவல் கமிஷன் விசாரித்து வருகிறது. இது தொடர்பாக சி.ஐ.சி., அனுப்பிய நோட்டீசுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது:


நம் நாட்டில் அங்கீகாரம் பெறாத போலி மருத்துவ கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்திய மாற்று மருத்துவமுறை வாரியம் என்ற பெயரில் மருத்துவ பட்டப் படிப்பு சான்றிதழ்களும் வழங்குகின்றன. இந்த நிறுவனங்களுக்கு எந்த சட்ட அங்கீகாரமும் இல்லை. ஆனாலும் போலி சான்றிதழ்களை வழங்குகின்றன. இதனால்தான் போலி டாக்டர்கள் உருவாகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை தகவல் கமிஷனர் யஷோவர்தன் ஆசாத் முன் நேற்று நடந்தது. அப்போது தகவல் கமிஷனர் கூறியதாவது: 

எம்.சி.ஐ.,யின், தகவல் அதிர்ச்சியளிக்கிறது. போலி டாக்டர்களால் மக்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படுகிறது. அதனால் எம்.சி.ஐ.,யுடன் ஆலோசனை நடத்தி இது போன்ற போலி மருத்துவ கல்வி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் போலி சான்றிதழ்கள் வழங்கப்படுவதை மத்திய சுகாதார அமைச்சகம் தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.