ஆரணி அருகே அரசுப் பள்ளியின் சம்பளப் பட்டியலில் மாதந்தோறும் திருத்தங்கள் செய்து, ரூ.15 லட்சம் வரை மோசடியாகப் பெற்ற இளநிலை உதவியாளரை தாற்காலிகப் பணி நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொன்.குமார் உத்தரவிட்டுள்ளார்.
ஆரணியை அடுத்த களம்பூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியின் இளநிலை உதவியாளராக கண்ணன் என்பவர் பல ஆண்டுகளாக வேலை செய்து வருகிறது. இவர், ஒவ்வொரு மாதமும் சம்பளப் பட்டியலில் திருத்தங்கள் செய்து முறைகேடான வகையில் கூடுதல் சம்பளம் பெற்று வருவதாக கல்வித் துறை அதிகாரிகளுக்குப் புகார்கள் சென்றன.
இதையடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொன்.குமார் களம்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் திடீர் ஆய்வில் ஈடுபட்டார். அப்போது, இளநிலை உதவியாளர் கண்ணன், தனது சம்பளப் பட்டியலில் திருத்தங்கள் செய்து முறைகேடாக ஒவ்வொரு மாதமும் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை கூடுதல் சம்பளம் பெற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறாக 2011 முதல் 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை சுமார் ரூ.15 லட்சம் வரை கண்ணன் கூடுதல் சம்பளம் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து, அவரை தாற்காலிகப் பணி நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொன்.குமார் உத்தரவிட்டார். இத்தனை ஆண்டுகளாக நடைபெற்ற மோசடியை பள்ளித் தலைமை ஆசிரியர் எப்படி கண்காணிக்கத் தவறினார் என்பது குறித்தும் கல்வித் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.