ஸ்மார்ட் கார்டு திட்டத்தை தொடங்குவதற்கான ஆரம்ப கட்டமாக ஆதார் எண்ணை குடும்ப அட்டையுடன் இணைத்தலை அவசியமாக்கியுள்ள தமிழக உணவுப் பொருள் வழங்கல் துறையினர், நியாயவிலைக் கடைகளில் ஆதார் அட்டையை நேரில் ஒரு முறை காண்பிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைகளில் முறைகேடுகளை தவிர்க்கும் பொருட்டு ஸ்மார்ட் கார்டு திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக உணவுபொருள் வழங்கும் துறை முடிவு செய்துள்ளது.
இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த நுகர்வோரின் விவரங்கள் அவசியம். இந்த விவரங்களை தற்போது ஆதார் கார்டுடன் இணைத்துள்ளதால் ஆதார் கார்டு பெற்றவர்கள் அந்த எண்ணை நியாயவிலைக் கடைகளில் ஒரு முறை காண்பிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அரக்கோணம் வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார் கூறியதாவது: ஆதார் அட்டை எடுத்து வரும் நுகர்வோரிடம் அதைப்பெற்று அந்த எண்ணை குறிப்பேட்டில் குறித்து கொள்ளுமாறு பணியாளர்கள் பணிக்கப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் ஸ்மார்ட் கார்டு திட்டத்தை கொண்டுவர ஆதார் அட்டை விவரங்களை சேர்க்க இது உதவும். எனவே ஒரு முறை ஆதார் அட்டையை கொண்டு வர சொல்கிறோம். அதே சமயம் ஆதார் அட்டை கொண்டு வந்தால் தான் பொருள்கள் வழங்கப்படும் என தெரிவிக்கும் நியாயவிலைக் கடை பணியாளர்கள் குறித்து தகவல் அளித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.