Pages

Sunday, January 24, 2016

இரு ஆண்டுக்கும் சேர்த்து இலவச 'லேப் - டாப்'

தமிழக அரசின் இலவச லேப் - டாப் கிடைக்காதவர்களுக்கு கொடுப்பதற் காக, தமிழ்நாடு மின்னணு கழகம் எனும், 'எல்காட்' நிறுவனத்தினர், 2014 - 15 மற்றும் 2015 - 16 கல்வியாண்டுகளுக்கும் சேர்த்து, 10.5 லட்சம் லேப் - டாப்களை கொள்முதல் செய்துள்ளனர். இது குறித்து, தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் கூறியதாவது:இரு கல்வியாண்டுக்கும் சேர்த்து தர வேண்டிய லேப் - டாப்கள் அனைத்தும், அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி முடிவடைந்தது.


எனினும், சில பள்ளிகள் விடுபட்டிருப்பதாக, தகவல் வந்துள்ளது. அதற்காகவே, சில ஆயிரம் லேப் - டாப்கள் உபரியாக வைக்கப்பட்டுள்ளன. விடுபட்டோரின் பட்டியலை, பள்ளிக் கல்வித் துறை தந்தால், அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.அ

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.