Pages

Saturday, January 23, 2016

கவுரவ பேராசிரியர்கள் பணி நிரந்தரமில்லை!!

கவுரவ பேராசிரியர்கள் பணி நிரந்தரமில்லை' காலியாக உள்ள கல்லுாரி ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்,'' என, உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் கூறினார். சட்டசபையில் நேற்று, கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதம்:

மார்க்சிஸ்ட் - பாலபாரதி: அரசு கல்லுாரிகளில், புதிதாக துவங்கப்பட்ட கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கு போதிய ஆசிரியர் இல்லை. கவுரவ ஆசிரியர்கள், பல ஆண்டுகளாக பணியில் உள்ளனர். அவர்களின் சம்பளத்தை உயர்த்துவதோடு, பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
அமைச்சர் பழனியப்பன்: காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது; பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.
கவுரவ பேராசிரியர்களுக்கு, 6,000 ரூபாயிலிருந்து, 10 ஆயிரம் ரூபாயாக ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இவர்களை நேரடியாக பணி நிரந்தரம் செய்ய முடியாது; ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமே நிரந்தர பணியில் சேர்க்க முடியும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.