'மத்திய அரசின் அனைத்து துறைகளும், ஊழல் புகார்களை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மத்திய லஞ்ச, ஊழல் மற்றும் கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு துறைகளில், தங்களது கட்டுப்பாட்டில் உள்ள, சி.வி.ஓ., எனப்படும், தலைமை கண்காணிப்பு அதிகாரிகளுக்கு, சி.வி.சி., எனப்படும், மத்திய லஞ்ச, ஊழல் மற்றும் கண்காணிப்பு ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவு:
மத்திய அரசு துறையில் நிகழும் ஊழல்கள் குறித்த புகார்கள், இணையதளத்தில் பதிவேற்றப்படுகின்றன. கடந்த ஆறு மாதங்களாக, இப்புகார்களை, பல சி.வி.ஓ.,க்கள் முறைப்படி கண்காணித்து, தக்க நடவடிக்கை எடுக்கவில்லை. சி.வி.ஓ.,க்கள், தங்களுக்கென ஒதுக்கப்பட்ட இணையதள கணக்குகளில் சேர்க்கப்பட்ட புகார்களை விரைவாக விசாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். மெத்தனமாக நடந்து கொள்ளும் அதிகாரிகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.