நாடு முழுவதும் ஐகோர்ட்டுகளில், 443 நீதிபதி பணியிடங்களும், சுப்ரீம் கோர்ட்டில், ஐந்து நீதிபதி பணியிடங்களும் காலியாக உள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த, தேசிய நீதித்துறை நியமன கமிஷன் நடைமுறைக்கு, சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது.
இதனால், கடந்தாண்டு, ஏப்ரல், 13 முதல், எந்த நியமனமும் நடக்கவில்லை. சுப்ரீம் கோர்ட் உத்தரவை அடுத்து, ஏற்கனவே அமலில் இருந்த, 'கொலீஜியம்' முறையே நடைமுறைக்கு வந்தது. இருந்தாலும், நீதிபதி நியமனம், பதவி உயர்வு உள்ளிட்ட நடைமுறை கள் முடங்கியுள்ளன. நாடு முழுவதும் உள்ள, 24 ஐகோர்ட்களில், அனுமதிக்கப்பட்ட, 1,044 நீதிபதி பணியிடங்களில், 443 பணியிடங்கள் காலியாக உள்ளன. சுப்ரீம் கோர்ட்டில், 31 பணியிடங்களில், ஐந்து இடங்கள் காலியாக உள்ளன. சென்னை ஐகோர்ட்டில்... நாட்டிலேயே மிகவும் அதிகபட்சமாக, அலகாபாத் ஐகோர்ட்டில், 86 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. அதற்கு அடுத்தபடியாக, சென்னை ஐகோர்ட்டில், 38 பணியிடங்கள் காலியாக உள்ளன.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.